SNO | கடன் திட்டத்தின் பெயர் | நகைக் கடன் |
---|---|---|
2. | கடன் பெற தகுதி உள்ளவர்கள் | 1) நாணயமான நல்ல வாடிக்கையாளர்கள் 2) எவ்விதமான கேள்விக்கும் இடம் இல்லாமல் உண்மையான நகை உரிமையாளர்கள் 3) பெரும்பான்மையாக, வங்கியின் செயல் எல்லையில் வசிப்பவர்களுக்கே நகைக்கடன் வழங்க வேண்டும். 4) 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். |
3. | இணை உறுப்பினர் | கடன் பெறுபவே வங்கியில் ரூ100/- செலுத்தி இணை உறூப்பினராக வேண்டும். |
4. | நகைக் கடன் பெற தகுதி இல்லாதவர்கள் | 1) 18 வயது நிரம்பாதவர்கள் (Minor) 2) மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ( Lunatic) |
5. | கடன் பெற தகுதியில்லாத தங்கம் / நகைகள் | 1) மூன்றாவது நபரின் தங்க நகைகள் ( Third Party) 2) சுத்தமான தங்கங்கள் ( Primary Gold) 3) தங்க கட்டிகள் ( Gold Bars) 4) 22 காரட்டுக்கு ( Carat) குறைவாக உள்ள தங்க நகைகள் 5) ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்ட நகையை மீண்டும் அடமானம் ( Repledge) வைத்தல் |
6. | கடனில் நோக்கத்தை அறிதல் | குடும்ப காரணங்களுக்காகவும் கல்வி மருத்துவம் சிறுவணிகம் தொழில் போன்ற முன்னுரிமை காரணங்களுக்காகவும் கடன் பெறலாம். எந்த நோக்கத்திற்காக, நகைக்கடன் வாங்குகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இதை நகைக்கடன் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். இதன் நோக்கம் வாங்கப்பட்ட கடன் தவறாக பயன்படக்கூடாது No Speculative Purpose) என்பதாகும். |
7. | கடன் வழங்கும் நடைமுறை | 1) கடன் பெறுபவர் கடன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டவாறு அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும். 2) கடன் பெறுபவர் நகைகளை மேலாளரிடம் கொடுக்க வேண்டும். 3) விண்ணப்பத்தில் உள்ளவாறு நகைகள் சரியாக உள்ளனவா என்பதை மேலாளர் சரிபார்க்க வேண்டும். 4) கட்ன பெறுபவர் முன்னிலையில் நகைகளின் எடையும் தரமும் ( Weight & touch) பார்க்கப்பட வேண்டும். 5) வங்கியின் நகை மதிப்பீட்டாளரால் நகைகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். 6) வங்கியின் மேலாளரும் நகை மதிப்பீடு செய்வது பற்றி தெரிந்திருக்க வேண்டும். 7) நகையின் மதிப்பு நகைகளின் எடை மற்றும் தரத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். 8) நிகர எடையை ( (Net weight) தங்கம் இல்லாத கற்கள் போன்றவற்றை நீக்கி முடிவு செய்ய வேண்டும். 9) நகைகள் 22 காரட் உள்ளது என்பதையும் அதைவிட குறைவானதில்லை என்பதையிம் நகை மதிப்பீட்டாளர் உறுதி செய்ய வேண்டும். 10) நகைகள் பித்தளை அல்லது வேறு உலோகங்களில் அல்லது தங்கமுலாம் பூசப்பட்டவி அல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும். |
8. | கடன் தொகையை மதிப்பிடுதல் | 1) பதிவாளர் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு உட்பட்டு கடன் தொகை கணக்கிடப்பட வேண்டும். 2 உச்ச அளவு கடன் தொகை நகையின் எடைக்கான உச்ச அளவு கடன் தொகை மற்றூம் ஒரு நபருக்கு உச்ச அளவு என பதிவாளரால் நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ஆகிய இரண்டில் எது குறைவாக உள்ளதோ அதுவே உச்ச அளவு கடனாக நிர்ணயிக்கப்பட வேண்டும். சந்தை மதிப்பில் கிராமுக்கு 75% அல்லது அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் அளவு 10 லகிராமுக்கு ஒரு கிராம் 500 மிலி கழிவாக எடுக்கப்படும்(1.500) 3) கடன் தொகை ரூபாய் நூறின் மடங்குகளாக வழங்கலாம். (Multiple of Rs.100) 4) ஏற்கனவே வங்கியில் ஈடாக வைக்கப்பட்ட அதே நகைக்கு இரண்டாவது கடன்( second loan) வழங்கக்கூடாது. |
9. | கடனின் காலம் | நகைக்கடன் ஓராண்டு காலத்திற்குள் திரும்ப செலுத்தப்படவேண்டும். |
10. | வட்டி விழுக்காடு | நகைக்கடனுகான வட்டி ரூ1,00,000/- வரை வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.50% ரூ2,00,000/- வரை வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.75% ரூ2,00,000/- க்கு மேலான கடன் களுக்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 10% தவணை தவறிய வட்டி 3% வட்டி விகிதம் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுரைகளூக்கு உட்பட்டது. |
11. | தவணைக்கு முன்பு கடனைச் செலுத்துதல் | 1) ஓராண்டு தவணைக்கு முன்பு கடனை திரும்ப செலுத்தினால் கடன் வழங்கிய நாளிலிருந்து கடனை செலுத்திய நாள் வரை வட்டி கணக்கிட்டு வசூல் செய்யப்பட வேண்டும். 2) கடன் வழங்கிய நாளிலிருந்து 15 நாட்களூக்கான வட்டி வசூலிக்கப்பட வேண்டும். |
12. | கடன் வழங்குதல் | 1) கடன் அனுமதிக்கப்பட்டதும் பற்று சீட்டில் கடன் பெறுபவரிடம் கையொப்பம் பெற்று பணம் வழங்கப்பட வேண்டும். 2) தங்க நகை பற்றிய விவரங்கள் குறிப்பிட்ட கடன் பேரேட்டில் கடன் பெறுபவரிடம் கையொப்பம் பெற வேண்டும். இதனால் ஈடுவைக்கப்பட்ட நகைகளை உறுதி செய்யவும் இயலும். |
13. | கட்டணங்கள் | 1) இணை உறுப்பினர் கட்டணம் 2) நகை மதிப்பீட்டாளர் கட்டணம் 3) இதர கட்டணங்கள் ஏதாவது இருப்பின் வசூலிக்கப்பட வேண்டும் |
14. | நகை கடன் அட்டை | கடன் தொகை வழங்கிய பின்னர் கீழ்க்கண்ட தகவல்கள் அடங்கிய இரண்டு நகைக்கடன் அட்டைகள் தயாரிக்கப்பட வேண்டும். 1) கடன் பெற்றவர் பெயர் 2) கடன் எண் 3) கடன் தொகை 4) கடன் வழங்கிய நாள் 5) நகைகள் ஈடாக வைக்கப்பட்ட நாள் அசல் அட்டை கடன் பெற்றவரிடம் ஒப்புதல் பெற்று கொடுக்க வேண்டும் |